6174 – சுதாகர் 3Worth a read
6174 – சுதாகர்

“தடிதடியா நாலு புஸ்தகங்க நாப்பது நாள் உக்காரவைச்சு நானூறு பக்கங்களுக்கு என்ன  நார்நாரா கிழிச்ச்சதுக்கப்புறம் எந்திரிச்சு வந்தா அங்க திரும்பவும் ரெண்டு தடி புஸ்தகங்க என்ன மொறச்சு பாத்துச்சு… ”  இவ்வளவு கஷ்டத்துக்கப்புறமும் புத்தகத்த படிக்கறத விடாம இருந்தா,  வாங்குன அடியோட வீக்கத்துக்கு ஆறுதலா வெந்நீர் ஒத்தடம் கொடுக்கறமாதிரி ஒருசில புத்தகங்கள் அப்பப்போ சிக்கும். அதுல ஒண்ணு தான் இந்த 6174.  இது மாதிரி புத்தகங்களால கொஞ்சம் உடம்ப தேத்திகிட்டா,  மீண்டும் இந்த ரத்த  பூமியில நம்ம சாகச பயணத்த தொடரலாம்.

ரஷ்யப் போர் கப்பல் ஒண்ணும் வடகொரிய போர் கப்பல் ஒண்ணும் நம்ம இந்தியப்பெருங்கடல் பகுதிக்குப் பயிற்சிக்காக வருது. அங்கே எதிர்பாராதவிதமா ஒரு சிக்கல் ஏற்படுது. இந்த அமெரிக்கா பசங்களுக்கு சும்மாவே மூக்கில வேர்க்கும். இப்போ சர்வதேச அளவுல டென்சன் உருவாகுது.  அதே நேரம் கப்பல்கள் இருக்கற கோ-ஆர்டிநேட்ஸுக்கு சரியா மேல இரண்டு விண் கற்கள் எதிர் எதிர் திசையில கைகோர்த்துட்டு பூமிய சுத்த ஆரம்பிக்குது .உலகத்தோட  மிகப்பழமையான ரகசியம் ஒண்ணு காலங்காலமா அடக்கிவைச்சிருந்த தன்னோட ஆற்றல உலகுக்கு காட்ட தனது இருண்ட ஆழப்பகுதியிலிருந்து சிலிர்த்தெழுது.

இதை சரியாய்ப் பயன்படுத்தி உலகத்த  அழிக்க, தங்களை லெமூரியர்கள்னு நம்பற ஒரு தீவிரவாதக் கும்பல் தயாராகுது.  இவர்கள  தடுக்க ஒரு பேராசிரியர்,  நிபுணர் குழுவ உருவாக்கறார். இவர்களுக்கு மத்தியில நடக்கற நீயா நானா சாகசங்கள் தான் பிளாட்.

முடிவுல சர்வதேச தீவரவாதிககிட்டயிருந்து உலகத்த காப்பாத்தறாங்களா? கதையில எத்தினி பாட்டு? எத்தினி பைட்டுன்னு?? விஜயகாந்த் பட ரேஞ்சுக்கு எக்ஸ்பெக்ட் பண்ணாம  ஒரு அருமையான அறிவுக்களஞ்சியமா இந்த புத்தகத்த பாக்கலாம்.

முதல்ல இந்த “6174” ஏன் தலைப்பா வைச்சிருக்காருன்னு தலைய சொறிஞ்சா , அது ஒரு கணிதக் கருந்துளை( mathematical black hole)  அப்படீங்கறார். எப்படின்னா,எந்த  ஒரு நாலு டிஜிட் நம்பர எடுத்துட்டாலும்  அதோட உள் எண்கள அசன்டிங், டிசெண்டிங்கா,  இரண்டு நாலு டிஜிட் எண்களா மாத்தி  அவற்றுக்குள்ள கழிச்சுகிட்டே வந்தா இந்த 6174ல வந்து முட்டி நிப்போம். இதுக்கு மேல போக முடியாது.

உதாரணத்துக்கு 3968 எடுத்துகிட்டா அதோட இரண்டு எண்கள் இப்படி 9863, 3689 வரும். இத கழிச்சா வர்றது 6174. இதுக்கு மேல போக முடியாது. இந்த எண்ணுக்குள்ள முடிவில்லாம சுத்திகிட்டிருக்க வேண்டியது தான். இந்த சூத்திரத்தக் கண்டுபிடிச்ச இந்திய கணித மேதை  கப்ரேகர் பேர்ல கப்ரேகர் கான்ஸ்டன்ட் அப்படீங்கறாங்க.  அறிவியல் சார்ந்த பல துறைகளோட கணக்குகள்ள இந்த கப்ரேகர்  கான்ஸ்டன்ட் வராம பாத்துக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

இந்த சூத்திரம் கதையில ஒரு முக்கிய பங்கு வகிக்குது அப்படின்னு தெரிஞ்சதுக்கப்புறம் கதையின் மேல இன்னமும் ஆர்வம் அதிகமாயிடும்.

புத்தகத்தோட ஆரம்பப் பக்கங்கள் உப்பு போட்ட அல்வா  சாப்பிடற மாதிரி மொழி நடை  கொஞ்சம் கொடுமையா இருந்தாலும் போகப் போக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு நாக்குல மெல்ட் ஆகறமாதிரி  நடையோட  கடினத்தன்மை மறைஞ்சு (அல்லது பழகிப்போயி)  அப்படியே நம்மள மறந்திடறோம்.

பெரு நாட்டின் மயன் கட்டிடக்கலைக்கும் நம்ம கோவில் கட்டிடக்கலைக்கும் உள்ள ஒற்றுமை, மயன் பிரமிடின் கருவறையோட பேர் “சிதம்பலம்” , தென்னிந்தியாவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இருந்த பண்டைய கால தொடர்புகள், “ஆனைகொன்றான்” “அனகோன்டாவா” மாறிய கதை, லெமூரிய கண்டம் பத்திய தகவல்கள், இந்தியாவில் விண்கல் விழுந்த லோனார் கிராமம், இப்படிப் பல சுவாரஸ்யமான விசயங்கள கதாப்பாத்திரங்கள் தொடர்ந்து பேசிக்கறது நம்ம ஆர்வத்தக் குறையாம பாத்துக்குது.

புத்தகத்தோட மத்தியில சுதாகர்  இந்த கணிதக்கருந்துளை பத்தி விவரிக்க ஆரம்பிக்கும்போது கதை மேலும் வேகமெடுக்குது .பிற்பகுதியில்  சீல்கந்த் மீன்கள் கதைக்குள்ள தாவும்போது நம்ம சிந்தனை இந்த உலகத்தை விட்டு ஆதிகாலத்துக்கே  போயிடுது.

உஷார். புத்தகத்தோட இறுதியில மிச்சம் இருக்கற கொஞ்சம் உப்பு அல்வாவ திரும்பவும் சாப்பிட வேண்டியிருக்கும்.

+ + +

 1. தமிழில் sci-fi  plot அரிது. சுஜாதாவுக்குப் பிறகு , தற்போது ஜெயமோகன் மற்றும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் சுதாகர் இந்த வறட்சியை போக்குகிறார்கள். இப்படியொரு முயற்சி எடுத்த சுதாகர பாராட்டியே தீரணும்.
 2. புத்தகத்துக்காக ஆசிரியர் நிறைய ரிசர்ச் செய்துள்ளது கதை நெடுகிலும் தெரிகிறது.
 3. புத்தகத்தை முடித்தவுடன்  பல்வேறு புதிய தகவல்கள் தெரிகிறது எனும் திருப்தியுடன், ஒரு அருமையான கதையை  படித்த நிறைவும்  வருகிறது.

– – –

 1. நடையில் நிறைய முன்னேற்றம் தேவை. ஆரம்பமும் இறுதியும் படிப்பதற்கு பதில் உப்பு அல்வாவை சாப்பிட்டு விடலாம்.

ஆங்கில நாவல்கள் கொடுக்கற sci-fi  ரீடிங் எபெக்ட்  தமிழ்ல அனுபவிக்க 6174 படிங்க.


Book Details:

Title 6174
Amazon Paperback
Flipkart Paperback
Editor(s)/Author(s)/Illustrator(s)/Translator(s) Sudhakar K. (சுதாகர்)
Publisher Vamsi books

About Ravindran V

தன்னைத் தானே செதுக்கி சுயமாக அடையாளம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு self-made மனிதனாக என்னைப் பார்க்கிறேன். கடவுள் இது போன்ற தவறை எப்போதும் செய்வதில்லை.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

3 thoughts on “6174 – சுதாகர்

 • OO

  * கரகோஷம் *
  தமிழ்ல சிறப்பா விமர்சனம் தொடங்கீடீங்க. பரவாயில்லை அல்வாலெ உப்பில்லாமல் இனிப்பாகவே குடுத்திட்டீங்க. வாழ்த்துக்கள். 🙂

 • M.Chakravarthy

  My apologies for commenting in english !!
  Good review,Ravi…makes a good teaser & promo material for 6174
  As i had told earlier…such reviews should be taken to the author’s knowledge also…Pls think & work towards it.

  Especially liked your salted halwa analogy !!

  Keep it up ….Awaiting your reviews…read more …write more.